சிறுமியை பயன்படுத்தி ஆடை விற்பனை நிலையத்தில் கொள்ளை
சிறுமியொருவரை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட கொள்ளை சம்பவம் தொடர்பான காட்சிகள் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.
நுகேகொடை பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபலமான ஆடை விற்பனை நிலையத்திற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரியவருகிறது.
சிறுமி ஒருவருடன் விற்பனை நிலையத்திற்குள் வரும் இளைஞர், அங்கு உடைகளை கொள்வனவு செய்ய சென்ற ஒருவருக்கு அருகில் சென்று அவரது பணப்பையை கொள்ளையிடும் காட்சி கமராவில் பதிவாகியுள்ளது.
கொள்ளையிட்ட பின்னர், உடைகளை கொள்வனவு செய்ய வந்தவர்கள் போல் அவர்கள் வெளியேறும் காட்சியும் பதிவாகியுள்ளது.
உடைகளை கொள்வனவு செய்த சென்றிருந்த பெண்ணொருவரின் பணப்பை காணாமல் போனதால், தமது பணப் பைகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு விற்பனை நிலையத்தின் உரிமையாளர்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளனர்.
பண்டிகை காலத்தில் இப்படியான சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்து வருவதால், கொள்ளையர்களிடம் கவனமாக இருக்குமாறு பொலிஸார் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
