கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளையர்கள் - பெருந்தொகை தங்கம் மீட்பு
கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் உட்பட கொள்ளை கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொரளையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்து ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்கப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையிட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கும்பலிடமிருந்து சிறியளவிலான போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
திருடப்பட்ட பொருட்கள் பறிமுதல்
சந்தேகநபர்களிடம் நடத்திய விசாரணையில், திருடப்பட்ட நகைகள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10ஆம் திகதி பொரளை கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிற்குள் புகுந்த கபர சுரேஷ் என்ற சந்தேக நபர், தங்கப் பொருட்களையும் பணத்தையும் திருடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பண்டார மற்றும் மதுரங்க ஆகியோருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய கிருலப்பனை மற்றும் கொழும்பு பிரதேசங்களில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 42, 46 மற்றும் 53 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
you may like this Video
    
    
    
    
    
    
    
    
    
    ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan