கொள்ளையர்கள் வீடு புகுந்து தாக்குதல்: தம்பதியினர் வைத்தியசாலையில் அனுமதி (VIDEO)

Sri Lanka Police Kilinochchi Sri Lanka Police Investigation
By Kanamirtha May 19, 2022 02:04 PM GMT
Report

கிளிநொச்சி - புளியம்பொக்கனை பகுதியில் மூன்று கொள்ளையர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியதில், வீட்டிலிருந்த தம்பதியினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வீட்டினுள் புகுந்த கொள்ளைக்காரர்களால் வீட்டிலிருந்த கணவன், மனைவி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொள்ளையர்கள் வீடு புகுந்து தாக்குதல்: தம்பதியினர் வைத்தியசாலையில் அனுமதி (VIDEO) | Robbers Break House Couple Admitted Hospital

கணவரின் கை பகுதியில் வெட்டுக்காயங்களுடனும் மனைவி உலக்கையால் தாக்கப்பட்ட நிலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை வீட்டிலிருந்த பல பொருட்களும் சேதப்படுத்தப்பட்டது.


இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட கொள்ளையர்கள் தப்பிச்சென்றுள்ளனர். சம்பவம் இடம்பெற்ற நிலையில் வீட்டிலிருந்த சிறுவர்களின் சத்தம் கேட்ட உடனே அயலவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.

கொள்ளையர்கள் வீடு புகுந்து தாக்குதல்: தம்பதியினர் வைத்தியசாலையில் அனுமதி (VIDEO) | Robbers Break House Couple Admitted Hospital

காயமடைந்த இருவரும் அயலவர்களின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் களவாடப்பட்ட பொருட்கள் தொடர்பில் தெரியவரவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US