மோடியின் வருகையையொட்டி மூடப்படவுள்ள பிரதான வீதிகள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு இன்று(04.04.2025) மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை(06) வரை கொழும்பு மற்றும் பல பகுதிகளில் வீதிகள் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பிரதமர் இன்று(04.04.2025) மாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடையவுள்ளார்.
விசேட போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இவ்வாறு வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூடப்படும் வீதிகள்
அதன்படி, கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பேஸ்லைன் வீதி இன்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இடையிடையே மூடப்படும்.
இதன்போது, விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள், தற்காலிக வீதி மூடல்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், ஏப்ரல் 5 ஆம் திகதி காலி முகத்திடல் பகுதி, சுதந்திர சதுக்கத்தை அண்மித்துள்ள வீதிகள் மற்றும் பத்தரமுல்லையில் உள்ள 'அபே கம' பகுதியைச் சுற்றியுள்ள வீதிகளும் அவ்வப்போது மூடப்படும்.
பிரதமர் மோடியின் வருகையை பாதுகாப்பதற்கும், சுமூகமான முறையில் நிறைவேற்றுவதற்கும் தற்காலிக கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam
