தீவக பிரதான வீதிகளுக்கு வீதி அடையாளக் குறியீடுகள் தேவை : வலியுறுத்தும் பிரதேசசபை
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் பாடசாலைகள் ஆலயங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களை வாகன சாரதிகளுக்கு அடையாம் காண்பிக்கும் வகையில் வீதி அடையாளக் குறியீடுகளை காட்சிப்படுத்துவதுடன் வேகக் கட்டுப்பாட்டு அடையாள கம்பங்களையும் நாட்டவும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேலணை பிரதேச சபையின் அமர்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை 10 மணிக்கு தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது.
வேகக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அடையாளங்கள்
இதன்போது குறித்த விடயம் குறித்து உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தினால் சபையில் முன்மொழிவு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த முன்மொழிவு குறித்து அவர் உரையாற்றுகையில், அண்மைய காலங்களில் வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதை காண முடிகின்றது.

இந்நிலையில் வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் இருக்கும் பாடசாலைகள் முக்கிய ஆலயங்கள், பொதுச் சந்தைகள், முக்கிய வளைவுகள் மற்றும் சந்திகளில் முறையான போக்குவரத்து அடையாளக் குறியீடுகள் பொருமாலும் இல்லாத அல்லது காண்பிக்கப்படாத நிலையே இருக்கின்றது.
குறிப்பாக தீவகப் பகுதியின் முக்கிய மையமாக இருக்கும் வேலணையின் பிரதான வீதிகளில் வீதிக் குறியீடுகள் வேகக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அடையாளங்கள் இல்லாத அல்லது காண்பிக்கப்படாத நிலையே இருக்கின்றது.
மாணவர்களது பாதுகாப்பு
அதேநேரம் தற்போது தீவகத்தை நோக்கி நாளாந்தம் தென்பகுதியில் இருந்து சுற்றுலாவிகளுடன் நூற்றுக்கணக்கான பேருந்துகள் வருகின்றன.
அத்துடன் டிப்பர் வாகனங்களும் கட்டுமானப் பொருட்களுடன் அதிவேகமாகச் செல்கின்றன. இதனால் விபத்துக்களும் விபத்துக்களை உருவாக்கும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துக் காணப்படுகின்றது.

எனவே மாணவர்களது பாதுகாப்பையும் மக்களது பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு வீதிக் குறியீடுகளை முறையாக காண்பிக்க துறைசார் தரப்பினர் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
பிரதேசத்தின் பாதுகாப்பு கருதியதான குறித்த கோரிக்கைக்கு சபையின் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதாக தவிசாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மகேஷ் பாபுவின் வாரணாசி பட நிகழ்ச்சியில் பாட ஸ்ருதிஹாசன் வாங்கிய சம்பளம்... இத்தனை கோடியா? Cineulagam