வீதிக்கான பெயர்ப் பலகைகள் நாட்டும் திட்டம்
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் வீதிகளுக்கான பெயர் பலகைகளை நாட்டும் வேலைத்திட்டம், எலாயன்ஸ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தின் நிதி அனுசரணையில் புதுக்குடியிருப்பு கிளையின் ஒருங்கிணைப்பில் இன்றையதினம் (11.11.2025) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போது பல வீதிகளில் பெயர் பலகைகள் சேதமடைந்து காணப்படுவதால், பொதுமக்கள் வீதிகளை அடையாளம் காண கடினமாக இருந்த நிலையில், அந்த சிரமத்தை நீக்கும் நோக்கில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அனுமதியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இதன் ஆரம்பமாக 30 வீதிகளுக்கான பெயர் பலகைகள் நாட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மிகப் பழமையான நிதி நிறுவனங்களில் ஒன்றான எலாயன்ஸ் பைனான்ஸ், 69 ஆண்டுகால பணி அனுபவத்துடன் 99 கிளைகள் மூலம் நாடு முழுவதும் நிதிச் சேவைகளை வழங்கி வருகின்றது.
சமூகப் பொறுப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு தேவையான பல சேவைகளை மேற்கொண்டு வரும் நிறுவனம், இவ்வருடம் பெயர் பலகை நாட்டும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
குறித்த செயற்திட்டத்தின் தொடக்கவிழாவில், எலாயன்ஸ் பைனான்ஸ் நிறுவனத்தின் பிராந்திய துணைத்தலைவர் மே. தயாபரன், உதவி பொது மேலாளர் செ. நிசாந்தன், கிளை முகாமையாளர் ச. விமோநியந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச சபை தபிசாளர் வே.கரிகாலன், பிரதேச சபை உறுப்பினர் அ.சற்குணதாஸ், மற்றும் நிறுவன உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு பெயர் பலகைகளை நாட்டி வைத்தனர். இந்த முயற்சி, புதுக்குடியிருப்பு பிரதேச மக்களுக்கு பயனளிக்கும் சமூகநலத் திட்டமாகப் பாராட்டப்படுகிறது.








குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam