வீதி அபிவிருத்தி பணிகள்: வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை(Photos)
வீதி அபிவிருத்தி பணிகளுக்காக வவுனியா - மன்னார் பிரதான வீதியினை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாற்று வீதியினை பயன்படுத்துமாறு மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி பணிகள்

வவுனியா சிங்கள பிரதேச செயலகம் அமைந்துள்ள பகுதியினை அண்மித்த பகுதியில் வவுனியா மன்னார் பிரதான வீதியில் காணப்படும் புகையிரத கடவை பாதையினை சீர்செய்யும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இதனால் இன்று(01.10.2022) முற்பகல் 7.00 மணி தொடக்கம் நாளை மறுதினம் (02.10.2022) பிற்பகல் 10.30மணி வரையிலான காலப்பகுதிக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

எனவே மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகதாக வகையில் மாற்று வீதிகளான புகையிரத நிலைய வீதி, நகரசபை நூலக வீதி, அரச விடுதி வீதி போன்ற வீதிகளை பயன்படுத்துமாறு இலங்கை புகையிரத திணைக்களத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri