முல்லைத்தீவில் வீதி அபிவிருத்தி ஒப்பந்ததாரர் தலைமறைவு!
முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்குட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் உள்ள நெத்தலியாறு பாடசாலை வீதியின் அபிவிருத்திப் பணிக்காக பெற்றுக்கொண்ட ஒப்பந்ததாரர் தலைமறைவாகியுள்ளதாகவும் வேலைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக புதுக்குடியிருப்பு பிரதேச சபை செயலாளரது முயற்சியின் பயனாக 2025ஆம் ஆண்டுக்கான மாகாணம் குறித்து ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி கொடையினூடாக விசுவமடு மேற்கு நெத்தலியாறு பாடசாலை வீதி புனரமைப்பு வேலைக்கான ஆரம்ப நிகழ்வு கடந்த மாதம் சபையின் தவிசாளர் மற்றும் பொதுமக்களின் ஏற்பாட்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
குறித்த 970 மீற்றர்கள் தூரவீதி அபிவிருத்தியானது, 14.28 மில்லியன் ரூபாயில் இரு கட்டங்களாக இடம்பெறவுள்ளது.
மக்கள் குற்றச்சாட்டு
கடந்த மாதம் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் மற்றும் செயலாளர் கிராம மக்கள் அமைப்புக்கள் ஒன்றிணைந்து அபிவிருத்தி பணியினை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.
இந்த வீதி அபிவிருத்தி பணியில் திருப்தி இல்லை என பிரதேச மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளதுடன் ஒப்பதந்ததாரருடனும் முரண்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை தவிசாளர் வே.கரிகாலனிடம் கேட்டபோது,
“தேசிய மக்கள் சக்தியின் கட்சி சார்ந்தவர்கள் குறித்த அபிவிருத்தி பணியினை குழப்பியுள்ளார்கள்.
ஒப்பந்ததாரருக்கு அனுப்பப்பட்ட கடிதம்
குறித்த வீதி அபிவிருத்தி வேலை சரியில்லை என்று சொன்னால் அதனை பிரதேச சபையிடம் மக்கள் தெரிவிக்க வேண்டும்.
இதனை விடுத்து ஒப்பந்ததாரர்களுக்கு பேசி அச்சுறுத்தலினை அந்த பிரதேசத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ளதன் காரணமாக ஒப்பந்ததாரர் வேலையினை விட்டுவிட்டு ஓடிவிட்டார்.
இந்தநிலையில், ஒப்பந்ததாரரினை தொலைபேசியில் தொடர்புகொண்டும் பதிலளிக்கவில்லை. ஒப்பந்ததாரருக்கு அபிவிருத்தி பணியினை பொறுப்பெடுத்து தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி சபையினால் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

காரை நிறுத்திய பொலிசாரிடம் மனைவிக்கு பிரசவ வலி என்று கூறிய பிரித்தானியர்: தெரியவந்த உண்மை News Lankasri
