இன்றும் கொழும்பில் மூடப்படும் வீதிகள்
கொழும்பை(Colombo) சுற்றியுள்ள பல பிரதான வீதிகள் இன்று இரவு மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் காற்றுடன் மரங்கள் முறிந்து விழுவதால் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுக்கும் நோக்கில் பல வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சட்டத்தரணி நிஹால் தல்துவ(Nihal Talduwa) இன்று இதனை குறிப்பிட்டுள்ளார்.
மூடப்படும் வீதிகள்
இதன்படி, பௌத்தாலோக்க மாவத்தை – மலலசேகர மாவத்தை முதல் தும்முல்லை சுற்றுவட்டம் வரையான வீதியும், விஜேராம வீதியின் கேகரி முச்சந்தி முதல் பௌத்தாலோக்க வீதி வரையும், பெரஹெர மாவத்தை ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தி முதல் ரொடுண்டா முச்சந்தி வரையான வீதியும், பேப்ரூக் பகுதியும் இவ்வாறு மூடப்படவுள்ளன.
மேலும், வெசாக் வலயங்களை பார்வையிடச் செல்லும் மக்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்திவிட்டு அந்த வலயங்களுக்கு நடந்து செல்ல முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பாதுகாப்பற்ற மரங்களுக்கு அடியில் தங்குவதையும் வாகனங்களை நிறுத்துவதையும் அவற்றுக்குள் தங்குவதையும் தவிர்க்குமாறு பொலிஸார் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

அப்ப புரியல, இப்ப புரியுது! 3 ஆண்டுகளுக்கு முன் வசியின் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே Manithan
