பரந்தன் பூநகரி வீதியில் நீண்டகாலமாக அகற்றப்படாத வீதித் தடை
கிளிநொச்சி - பரந்தன் பூநகரி, பிரதான வீதியில் நீண்டகாலமாக நீக்கப்படாத வீதித்தடைகள் இருந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அப்பாதை ஊடான பயணத்தின் போது அவற்றை அவதானிக்க முடிகின்றது. அவை ஏற்படுத்தும் அசௌகரியமான அனுபவத்தை பெறவும் முடிகின்றது.
சேதமடைந்த வீதியின் பகுதிகளில் திருத்தத்திற்காக வெட்டப்பட்டு அது அவ்வாறே விடப்பட்டுள்ளது. இதனால் வீதியின் ஊடான பயணம் அதிக சீரமத்திற்குள்ளான ஒன்றாக இருப்பதாக பரந்தன் பூநகரி வீதியூடாக யாழ்ப்பாணம் சென்று வரும் பயணிகள் பலர் கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
காபைட் வீதியாக இருக்கும் இது, உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வராததே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பிரதான வீதிகளின் நீண்டகால பயன்பாட்டுக்கு அவை உரிய பராமரிப்போடு சேதமாகும் பகுதிகளை உடனுக்குடன் திருத்தியமைக்க வேண்டும். அப்போது தான் பிரதான வீதியின் பயனை மக்கள் முழுமையாகப் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீதியூடான பயணம்
பரந்தனில் இருந்து பூநகரி நோக்கி பயணிக்கும் போது பயணப் பாதையில் பல இடங்களில் சேதமடைந்த பகுதிகள் மீள் செப்பனிடப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
ஆயினும், பூநகரியை அண்மிக்கும் போது உள்ள வீதியில் பல இடங்களில் சேதமடைந்த பகுதிகள் மீள் செப்பனிடப்பட்டுள்ள முறை வரவேற்கத்தக்கதாக இல்லை.
சேதமான பகுதியில் கல் இட்டு தார் ஊற்றப்பட்ட போதும் சமமாக அழுத்தப்பட்டு சேதமடையாத வீதியின் அமைப்புக்கேற்ப பொருத்தமாக்கப்படவில்லை.
வீதியினூடாக பயணிக்கும் போது வீதியில் உள்ள மீள் செப்பனிடப்பட்ட பகுதியினூடாக வாகனம் செல்லும் போது குலுக்கி உலுப்புவதாகவும் குறிப்பிடுகின்றார் யாழ் செல்லும் பயணி ஒருவர்.
வாகனத்தின் வேகத்தினை குறைத்து மெதுவாக அதனூடாக பயணிக்க வேண்டும். அல்லது அதனை விலக்கி பயண தடத்தை பேண வேண்டும்.
இத்தகைய அணுகுமுறை தேவைப்படுமெனில் அந்த மீள் செப்பனிடல் தேவையற்ற செயற்பாடாகவே இருக்கும். செப்பனிடாத சேதமடைந்த வீதியின் பகுதியூடாக பயணிக்கும் போதும் மெதுவாக செல்ல நேரிடும். அல்லது அதனை தவிர்த்து வீதியின் ஏனைய பகுதியூடாக செல்ல வேண்டும்.
இந்த வகையான பயணங்கள் விபத்துக்களை ஏற்படுத்தி விடுவதில் அதிக பங்கு வகிக்கும் என்பது திண்ணம்.
பயணத்திற்கு பொருத்தமான முறையில் வீதிகள் மீள்செப்பனிடப்படாதது தொடர்பில் ஏன் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் கருத்தில் எடுக்காதிருக்கின்றனர். இத்தகைய அணுகுமுறை அவர்களின் பொறுப்பற்ற செயலுக்கு எடுத்துக் காட்டாக இருப்பதாகவும் யாழ் செல்லும் பயணி குற்றம் சாட்டுகின்றார்.

யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலையில் மற்றொரு சர்ச்சையில் சிக்கிய வைத்தியர் கிருசாந்தி..! அம்பலமாகும் உண்மைகள்
வீதிப்போக்குவரத்து பொலிஸார்
வீதிப் போக்குவரத்து பொலிஸார் வீதியிலுள்ள தடைகளை அகற்றுவது தொடர்பில் கவனமெடுக்க வேண்டும் என்பது பொதுவான விதியாகும். இதனை நடைமுறைப்படுத்தும் விதமாகவே அவர்களது செயற்பாடுகள் அமைந்துள்ளன.
ஆயினும், வீதிகளின் சேதம் பற்றியோ அவை மீள் புனரமைப்பு செய்யப்படும் போது பயணத்துக்கு பொருத்தமற்ற விதத்தில் அவை அமைவது பற்றியோ வீதிப்போக்குவரத்து பொலிஸார் கவனமெடுப்பதில்லை என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.
வீதிகளின் புனரமைப்பு மற்றும் பராமரிப்பு என்பன வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பணி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சீரமைக்கப்பட்ட வீதிகளில் பயணத்தை ஒழுங்கமைப்பதும் பயணத்திற்கு ஏற்படும் தடைகளை உடனுக்குடன் அகற்றி பயணத்தை சீராக்குவதும் அவர்களின் அன்றாட கடமைகளாக இருக்கின்றன.
இதனால் வீதி விபத்துக்களை தவிர்த்துக்கொள்ள முடியும் என்பது யதார்த்தம். அப்படியெனின் பாதைகளில் ஏற்படும் சேதங்களும் சீரற்ற பாதை புனரமைப்புக்களும் வீதி விபத்துக்களை ஏற்படுத்தக் காரணமாகும் என்பது மட்டும் ஏன் புரிந்து கொள்ளப்படவில்லை என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியாது.
தொடர்பாடல் வேண்டும்
வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கும் வீதிப் போக்குவரத்துப் பொலிஸாருக்கும் இடையில் வீதி புனரமைப்புக்களின் போது அவ்வீதி புனரமைப்புக்கள் தொடர்பான தொடர்பாடல் இருக்குமானால் வீதிப் போக்குவரத்து பொலிஸாரின் ஆலோசனைகளையும் கண்காணிப்பையும் பெற்று நேர்த்தியான பாதை மீள் புனரமைப்பை மேற்கொள்ள முடியும்.
இத்தகைய சூழல் இருந்திருந்தால் பரந்தன் பூநகரி வீதியில் உள்ள பாதையின் சேதமான பகுதிகளை மீளவும் திருத்திக் கொண்ட போது அதன் மீது பயணிக்கும் சந்தர்பங்களில் ஏற்பட்டுள்ள உலுக்கி குலுக்கும் அசௌகரியம் இருக்காது. இந்த நிலை விபத்தை ஏற்படுத்தி விடும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தால் பாதை மீள் திருத்தத்தின் பின் அழுத்தமாக இருக்குமாறு பேணப்பட்டிருக்கும்.
எனினும் அவ்வாறான ஒரு சூழல் இலங்கையில் நிகழ்வதாக தெரியவில்லை. அப்படியான ஒரு சூழல் இலங்கையில் நடைமுறை வழக்கமில்லை என வாதிடும் பழமைவாதிகள் சிலருடன் இவை தொடர்பில் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.
புதிய ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்கி அவற்றை இயல்பான வழக்கமாக மாற்றி கொள்ளும் போது சந்ததியாக அவை பின்பற்றப்படும் நன்மை இருப்பதாக மற்றும் சிலர் சுட்டிக் காட்டுவதும் நோக்கத்தக்கது.
பரந்தன் பூநகரி பிரதான வீதியில் பல இடங்களில் ஏற்பட்ட சேதங்கள் மீளவும் திருத்தப்படும் வகையில் புனரமைத்திருப்பதை அவதானிக்கலாம்.அவற்றில் பல இலகுவான பயணத்திற்கு ஏற்றதாக இல்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.
அத்தோடு, இன்னும் பல இடங்களில் மீள் புனரமைப்பு செய்யப்படாமலும் மேலும் சில இடங்களில் மீள் புனரமைப்பு செய்ய ஆரம்பிக்கப்படாமலும் இருப்பதையும் சுட்டிக்காட்டலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

பிறந்து 15 நாள் ஆன குழந்தையை ஃப்ரிட்ஜில் வைத்த தாய்.., பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம் News Lankasri
