மாடுகளை காப்பாற்ற முற்பட்டவர் பரிதாபமாக மரணம்
வீதியின் குறுக்கே ஓடிய மாடு ஒன்றை காப்பாற்ற முற்பட்ட முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலாபம் - குருநாகல் வீதியில் முன்னேஸ்வரம் கோவிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியை கடந்த மாடு
இதேவேளை, வெல்லவாய தனமல்வில பிரதான வீதியின் கிவுல்ஆர பகுதியில் சீனி ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வீதியைக் கடந்த மாட்டினை சாரதி காப்பாற்ற முற்பட்ட போதே லொறி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |