கோர விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேருந்து (Photos)
ஓமந்தையில் வீதியில் படுத்திருந்த மாட்டினால் இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றும் கன்ரர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இச் சம்பவம் இன்று (19.11.2023) அதிகாலை ஓமந்தையில் இடம்பெற்றுள்ளது.
விபத்து
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கன்ரர் ரக வாகனம், ஓமந்தையில் வீதியில் படுத்திருந்த மாட்டினை கடப்பதற்கு முற்பட்ட வேளையில் பின்னால் வந்த இலங்கை பேருந்து சபைக்கு சொந்தமான பேருந்து கன்ரர் வாகனத்தினை பின்னால் மோதியது.

இதனால் கன்ரர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி வாகனம்
தடம்புரண்டது.
இவ்விபத்தில் பாரவூர்த்தியில் பயணித்த சாரதி மற்றும் நடத்துனர் காயமடைந்ததுடன், பேருந்தில் பயணித்த பயணி ஒருவரும் காயமடைந்துள்ளார். காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நிலா-சோழனுக்கு கிடைத்த உயில், ஆனால் அதில் இருந்தது என்ன தெரியுமா?... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் கூட்டு ராணுவப் பயிற்சி: போர்க்கப்பல்களுடன் களமிறங்கிய முன்னணி நாடுகள் News Lankasri
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan