வயோதிபரை மோதித் தள்ளிய வான்! சம்பவ இடத்திலேயே பலியான முதியவர்
வீதி விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியால் நடந்து சென்ற குறித்த நபரை பின்னால் வேகமாக வந்த ஹயஸ் வான் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கம்பஹா மாவட்டம், நீர்கொழும்பு பிரதேசத்தில் இன்று (14.07.2023) காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பில் வசிக்கும் 77 வயதுடைய வி.பழனியப்பா என்ற நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்ற ஹயஸ் வாகனத்தின் சாரதியை வீதிப்
போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் துரத்திப் பிடித்துள்ளனர்.
உயிரிழந்த வயோதிபரின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
விபத்து தொடர்பில் மேலதிக
விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 15 மணி நேரம் முன்

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
