முறிகண்டி பகுதியில் வாகன விபத்து: ஒருவர் பலி - மற்றுமொருவர் படுகாயம் (Photos)
முறிகண்டி - செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு - மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம்
பகுதி, A9 வீதியில் நேற்று (21.10.2023) இரவு 10 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய கதிரவேலு லட்சுமனன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பார ஊர்தி மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களே உயிரிழந்தும், படுகாயமடைந்துள்ளனர்.
பொதுமக்களிற்கு இடையில் வாக்குவாதம்
பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பொலிஸாருக்கும், பொதுமக்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு மாங்குளம் தலைமைப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
