விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இரு இளைஞர்கள்
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம், கலென்பிந்துனுவெவ - யக்கல்ல பகுதியில் நேற்று(05) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கலென்பிந்துனுவெவ பகுதியை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து இழுபட்டுச் சென்றதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளின் செலுத்துனரும் பின்புறத்தில் பயணித்தவரும் காயமடைந்து யக்கல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 20, 31 வயதுடைய கலென்பிந்துனுவெவ மற்றும் அங்குருவாதொட்ட பகுதிகளை வசிப்பிடமாகக் கொண்ட இளைஞர்கள் என்று பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்த இருவரது சடலங்களும் யக்கல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் கலன்பிந்துனுவெவ பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 23 மணி நேரம் முன்

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
