பிரித்தானியா - லண்டன் மாநகரில் பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல்
பிரித்தானியா - லண்டன் மாநகரில் பேராதனை பல்கலைக்கழக பழைய மாணவர்களின் நதிக்கரை PERANIGHT வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வானது பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
லங்காசிறி ஊடக வலையமைப்பின் பிரதான அனுசரணையில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி பிரித்தானிய நேரம் மாலை 5.30 மணி தொடக்கம் இரவு 11 மணி வரை நிகழ்வு நடைபெறவுள்ளது.
லண்டன் மாநகரின் Uxbridge Rd, Hayes பகுதியில் அமைந்துள்ள Crystal Banqueting மண்டபத்தில் நிகழ்வானது இடம்பெறவுள்ளது.
வழமைபோன்று நூற்றுக்கணக்கான பேராதனை பல்கலைக்கழக பீடங்களைச்சேர்ந்த பட்டதாரிகளும் அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் கலந்து சிறப்பிப்பார்கள் என ஏற்பாட்டுக்குழு தமது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு தொடர்பாக இதை ஏற்பாடு செய்கின்ற E/94 குழுவை சேர்ந்தவர்கள் கருத்து கூறுகையில், ''இந்த நிகழ்வு ஒரு உறவுப்பாலமாக பலவிடையங்களில் அமைகின்றது.
நண்பர்களை சந்தித்தல், பல்வேறு துறைகளிலும் கடமையாற்றுபவர்களிடம் அத்துறைதொடர்பான தகவல்களைப்பரிமாறுதல், தேவையான துறையில் வேலைகளை பெறுவது பற்றி கலந்துரையாடல் என்பது மட்டுமின்றி எமது பிள்ளைகளை ஊக்குவிக்குமுகமாக அவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்கின்றோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ளவும்: peranight2024@gmail.com

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்





ரோஹினி அம்மாவை நேரில் சந்தித்த மீனா, க்ரிஷ் செய்ய மறுக்கும் காரியம்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
