பெப்ரவரி இறுதிக்குள் நாட்டை ஆக்கிரமிக்கப் போகும் ஒமிக்ரோன்! அபாய நிலை தொடர்பில் வெளியான எச்சரிக்கை
நாட்டில் ஏற்கனவே டெல்டா வைரஸ் பரவிக்கொண்டுள்ள நிலையில் அதனை விடவும் பல மடங்கு வேகமாக ஒமிக்ரோன் வைரஸ் பரவுவதை அவதானிக்க முடிகின்றது. இந்த நிலைமை தொடருமானால் பெப்ரவரி மாதம் இறுதிக்குள் நாடு முழுவதும் ஒமிக்ரோன் வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார பணியகத்தின் பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளில் அதிகளவான ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
தற்போது அடையாளம் காணப்படும் கோவிட் -19 வைரஸ் தொற்றாளர்களில் 50 வீதத்திற்கு அதிகமானவர்கள் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.
எனவே தடுப்பூசி மூலமாக மட்டுமே எம்மால் நிலைமைகளை கட்டுப்படுத்த முடியும். இரண்டு தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட சகலரும் மூன்றாம் தடுப்பூசியை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan