இலங்கையில் நியோகோவ் வைரஸ் பரவும் அபாயம்
தென்னாப்பிரிக்காவின் புதிய கோவிட் மாறுபாடான நியோகோவ் அல்லது BA.2 வைரஸ், எதிர்வரும் நாட்களில் நாட்டிற்குள் நுழையும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது பரவும் பட்சத்தில் தொற்றுக்குள்ளாகாமல் பாதுகாத்துக் கொள்வதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் மருத்துவர் சுசி பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த வகை வைரஸ் தற்போது தென்னாப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பரவி வருகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாறுபாடில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு கோவிட் பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றிருப்பது அவசியமாகும். இதனால் உடனடியாக சென்று பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri