இலங்கையில் குணமடைந்தவர்களுக்கும் தென்னாபிரிக்கா கோவிட் வைரஸ் தொற்றும் ஆபத்து
தென்னாபிரிக்காவில் பரவும் புதிய கோவிட் வைரஸ் மரபணு இலங்கையில் பரவினால் மூன்றாவது கோவிட் அலை ஏற்படும் ஆபத்துக்கள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொதுவான கோவிட் -19 தொற்றினை கட்டுப்படுத்தும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி திறன் தென்னாப்பிரிக்க திரிபினை அடக்குவதற்கு இல்லை.
இதனால் ஏற்கனவே கோவிட் தொற்றுக்குள்ளாகி குணமடைந்த நபர்களும் தென்னாபிரிக்க வைரஸ் தொற்றுக்குள்ளாக கூடும். இந்த வைரஸ் பரவினால் தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அத்துடன் தீவிர சிகிச்சை பிரிவுகளின் அவசியங்கள் அதிரிக்கும். அதேபோல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும்.
இதேவேளை, இந்த திரிபினை கட்டுப்படுத்துவதற்காக ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ராசெனிகா தடுப்பூசி போதுமானதில்லை என விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri
பிரான்ஸில் காருக்குள் சிக்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்கள்: தாயின் பதிலில் பொலிஸாருக்கு சந்தேகம் News Lankasri
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam