கடும் உணவு பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து! இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கோவிட் பரவல் காரணமாக சுகாதார கட்டமைப்பு மற்றும் அரச நிதி என்பவற்றுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் வருடத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். அபுதாபியில் இடம்பெற்றுவரும் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கோவிட் பரவல் காரணமாக உலகப் பொருளாதாரத்தின் மீதான தாக்கம் தொடர்ந்து வளரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சர்வதேச நாணய நிதியம் தயாரித்த மதிப்பீட்டின்படி, பல நாடுகளில் தனிநபர் வருமானம் தொற்றுப்பரவலுக்கு முன்ன் இருந்ததை விட வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் நிலைமையின் காரணமாக ஏற்பட்டுள்ள அழிவு, பிராந்திய காலநிலை மாற்றத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் எனபன அடுத்த வருடத்தில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
Making Video: கூடவே வாழ்ந்த மாதிரி பேசுறீங்க... சுதா கொங்கராவிற்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! Manithan