இலங்கைக்கான விமான சேவைகளுக்கு தடை: எச்சரிக்கும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் - செய்திகளின் தொகுப்பு (Video)
இலங்கையில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது இலங்கையின் விமான நிலையங்களுக்கு வரும் விமானங்களுக்கு டொலரில் மட்டுமே எரிபொருள் நிரப்பப்படுகிறது.
விமான நிறுவனங்களும் தங்கள் உள்ளூர் பிரதிநிதிகளுக்கு பெரும் தொகையான பணம் செலுத்த வேண்டியுள்ளது.
இலங்கைக்கு வாரத்திற்கு 12 விமானங்களை முன்பதிவு செய்து வந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள், தற்போது அந்த எண்ணிக்கையை மூன்றாக குறைத்துள்ளன.
இதேவேளை சில விமான நிறுவனங்கள் இலங்கைக்கு விமானங்களை அனுப்புவதை நிறுத்தியுள்ளன.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,