அதள பாதாளத்திற்கு செல்லும் இலங்கை - சர்வதேச விமான பயணங்களும் கட்டுப்படுத்தப்படும் அபாயம்
இலங்கையில் தற்போது நிலவும் டொலர் நெருக்கடி காரணமாக பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது இலங்கையின் விமான நிலையங்களுக்கு வரும் விமானங்களுக்கு டொலரில் மட்டுமே எரிபொருள் நிரப்பப்படுகிறது. அத்துடன் விமான நிறுவனங்களும் தங்கள் உள்ளூர் பிரதிநிதிகளுக்கு பெரும் தொகையான பணம் செலுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய, இலங்கைக்கு அனுப்பும் விமானங்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவது மற்றும் விமான பயணங்களின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து வெளிநாட்டு விமான நிறுவனங்கள் பரிசீலித்து வருகின்றன.
இந்த நெருக்கடி ஐந்து மாதங்களாக நீடித்து வருகின்றது. இது தொடர்பில் தீர்வை எட்டுவதற்கு அதிகாரிகளுடன் பல தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.
அத்துடன் டொலரில் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை, விமான டிக்கட் மற்றும் சரக்கு விற்பனைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையின் சதவீதமாகும்.
இந்த நிலைமை இலங்கையின் எதிர்கால சுற்றுலா அபிவிருத்தி நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் அதிக முதலீடு செய்துள்ளது. எவ்வாறாயினும், இலங்கைக்கான விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டால் முதலீடு செய்யப்படும் பணம் வீணாகிவிடும் என சுற்றுலாத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கைக்கு வாரத்திற்கு 12 விமானங்களை முன்பதிவு செய்து வந்த வெளிநாட்டு விமான நிறுவனங்கள், தற்போது அந்த எண்ணிக்கையை மூன்றாக குறைத்துள்ளன.
இதேவேளை சில விமான நிறுவனங்கள் இலங்கைக்கு விமானங்களை அனுப்புவதை நிறுத்தியுள்ளன.
இலங்கையில் சுற்றுலாத்துறையை நிலைநிறுத்துவதற்கு அரசாங்கம் விமான நிறுவனங்களுக்கு செலுத்தும் டொலர்களை எவ்வித இடையூறும், தடையும் இன்றி அதே முறையில் செலுத்த வேண்டும் என்பதே சுற்றுலாத்துறையின் கருத்தாகும்.

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

காஷ்மீர் விவகாரத்தில் யாரும் மத்தியஸ்தம் செய்ய தேவை இல்லை - டிரம்ப் கோரிக்கையை நிராகரித்த மோடி News Lankasri
