இலங்கை என்ற நாடு இல்லாமல் போகும் அபாயம்
சமகாலத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையில் இருந்து நாட்டை மீட்கவில்லை என்றால் இலங்கை என்ற நாடு இல்லாமல் போய்விடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு தேசிய அரசாங்கங்களை அமைக்காமல் தேசிய இணக்கப்பாட்டுடன் கூடிய வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிருலப்பனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் அரசாங்கம் ரூபாயை வீழ்ச்சியடைய செய்தது. இதுவரையில் நாட்டில் பெரும் பற்றாக்குறை காணப்பட்டது. டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டது. டொலர் தட்டுப்பாட்டினால் பொருட்களை கொள்வனவு செய்ய முடியவில்லை. அதற்குத் தீர்வாக மத்திய வங்கியில் இருந்து ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைய செய்யப்பட்டது.
அது மாத்திரமின்றி இன்று மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை இத்துடன் முடிந்துவிடாது. ஜுலை மாதம் அளவில் நாங்கள் ஒரு பில்லியன் டொலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் இங்கு உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார நிலைமை குறித்த அடுத்த வார விவாதத்திற்கு முன்னதாக அந்த அறிக்கையை இந்த வாரம் எங்களுக்கு வழங்குவார்கள் என்று நான் நம்புகிறேன்.
இப்போது செய்ய வேண்டியது அரசாங்கங்களை மாற்றுவது அல்ல. இந்த நிலைமையை தீர்க்க வேண்டும்.. அல்லது அடுத்த சில மாதங்களில் நாட்டை இழக்க நேரிடும். எங்களுக்கு இங்கு தேசிய அரசாங்கங்கள் தேவையில்லை. எங்களுக்கு தேசிய ஒருமித்த கருத்தே தேவையாக உள்ளது என ரணில் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 4 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
