மில்லியன் கணக்கான பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்
இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பைசர் பயோன்டெக் கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இந்த விடயம் பற்றி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பைசர் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு பயன்படுத்த தவறும் தடுப்பூசிகள் காலாவதியாகும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பூஸ்டர் டோஸ்களுக்காக இவ்வாறு அரசாங்கம் பெருந்தொகை பைசர் தடுப்பூசிகளை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியுள்ளது. பூஸ்டர் டோஸ் ஏற்றுகைக்காக அரசாங்கம் 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் கொள்வனவு செய்திருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் இன்னமும் ஒன்பது மில்லியன் தடுப்பூசிகள் களஞ்சியச்சாலைகளில் எஞ்சியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
