இலங்கை நாணயம் தொடர்பில் பொருளாதார ஆய்வாளர் கடும் எச்சரிக்கை
இலங்கையில் பணவீக்கம் 60 வீதம் முதல் 70 வீதம் வரை அதிகரித்தால் நாட்டின் நாணயத்தின் பெறுமதி கடுமையாகப் பாதிக்கப்படலாம் என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் நிதிச் சிக்கல்கள் உள்ளவர்களின் கைகளுக்குப் பணத்தைச் சேர்ப்பதற்கான முறைமை உருவாக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் பணவீக்கம் 54 சதவிகிதம் என்பது முற்றிலும் உலகளாவிய காரணிகளால் ஏற்பட்டதல்ல, உள்ளூர் காரணிகளும் இதில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளன.
ஏழை மக்களை சங்கடப்படுத்த கூடும்
அமைப்பில் தேவையில்லாமல் பணம் சேர்த்ததே இதற்குக் காரணமாகும். மத்திய வங்கி ஆளுநரின் நியமனத்திற்குப் பிறகு, வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. சந்தையில் இருந்து பணத்தைப் பெறுவதற்கு அவர் அதிக நாட்டம் காட்டினார்.
அதுவும் ஒரு நல்ல போக்கு." ஆனால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க சுமார் 1.2 டிரில்லியன் ரூபாய் தேவை என பிரதமர் அறிவித்துள்ளார். அப்படியே பணத்தை அச்சடித்துக்கொண்டே இருந்தால், இந்தப் பணவீக்கத்தைக் குறைக்கவே முடியாது.
இது ஏழை மக்களை மேலும் சங்கடப்படுத்தும். ஆகையினால் நாம் செய்ய வேண்டிய மற்ற விடயம் என்னவென்றால், ஏழை மக்களைப் பாதுகாக்க பணம் அவர்களின் கைகளுக்குச் செல்லும் ஒரு அமைப்பைத் தயாரிப்பதாகும்.
பணவீக்கம் 60 வீதம் முதல் 70 வீதம் வரை இருந்தால், எமது நாணயம் அதன் மதிப்பை இழக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You My Like This Video