இலங்கையில் ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பும் ஸ்தம்பிக்குமென எச்சரிக்கை
நாட்டின் வைத்தியசாலைகளை மூடக்கூடிய அபாய நிலை உருவாகியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ஒன்றியத்தின் தலைவர் டொக்டர் ரூக்ஸான் பெல்லன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மருந்துப் பொருட்கள், எரிவாயு மற்றும் எரிபொருள் என்பன கிடைக்காவிட்டால் வைத்தியசாலைகளை மூட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலைகளில் நிலவி வரும் இந்த பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்கத் தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்னும் ஓரிரு வாரங்களில் அரசாங்க வைத்தியசாலைகள் அனைத்தையும் மூட நேரிடலாம்.
மருத்துவர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் வாகனங்களில் போக்குவரத்து செய்ய போதியளவு எரிபொருள் கிடைக்கப் பெறுவதில்லை.
நோயாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உணவு சமைத்துக் கொள்ள எரிவாயு கிடைக்கவில்லை.
நோயாளர்களுக்கு வழங்க போதியளவு மருந்துகள் கிடையாது. இந்த நிலைமைகள் பூதாகாரமாகும் வரையில் காத்திருக்காது விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
அவ்வாறு செய்யாவிட்டால் ஒட்டுமொத்த வைத்தியசாலை கட்டமைப்பும் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
