ஐரோப்பிய நாடுகளால் இலங்கையில் பறவைக்காய்ச்சல் பரவும் ஆபத்து
இலங்கையில் பறவை காய்ச்சல் ஏற்படும் அபாயம் உள்ளதாக முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பா உட்பட வெளிநாடுகளில் நாடுகளில் வாழும் கோழிகளை கொண்டு வருவதனால் இந்த பறவைக்காய்ச்சல் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருகின்றது.
எங்கள் நாட்டிற்கு அந்த நாடுகளில் வாழும் கோழிகளை கொண்டு வருவதற்கு நடவக்கை மேற்கொண்டால் இங்கும் பறவைக்காய்ச்சல் ஏற்பட கூடும்.
இது தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் போதுமான அளவு முட்டைகள் உள்ளன. 10 ரூபாய் என்ற குறைந்த விலையில் முட்டை காணப்படுகின்றது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து கோழிகளை கொண்டுவரும் மோசடி வியாபாரம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த மோசடி வியாபாரத்திற்கு கோழி இறைச்சி வர்த்தகத்தில் ஈடுபடும் மூன்று நிறுவங்களுக்கு தொடர்பு உள்ளது. அவர்கள் இந்த நாட்டில் கிராமிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் கோழி வளர்க்கும் நடவடிக்கைக்கு வீழ்ச்சி ஏற்படுத்துவதற்கு செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.