நீர்வேலி மேய்ச்சல் பகுதியில் கொட்டப்படும் மலக்கழிவுகள்! நீர் நிலைகள் பாதிக்கப்படும் என விசனம்
வலி. கிழக்கு புத்தூர் பிரதேச சபைக்கு உட்பட்ட நீர்வேலி மேய்ச்சல் தரவைப் பகுதியில் முறையற்ற விதத்தில் மலக்கழிவுகள் கொட்டப்பட்டதால் நேற்று முன் தினம் (14.09.2022) அங்கு முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரியவருகிறது.
மலக்கழிவுகளை கொட்டும் நடவடிக்கை
கால்நடைகள் மேய்ச்சலில் ஈடுபடும் நீர்வேலி தரவைப் பகுதியில் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சேகரிக்கப்பட்ட மலக்கழிவுகளை புத்தூர் பிரதேச சபை வாகனம் கொட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது.
இதனை அறிந்த அப்பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடுபவர்களுக்கும் மலக்கழிவை கொட்டுவதற்கு வருகை தந்தவர்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த அப்பகுதியை அண்டிய மக்கள் மலக்கழிவுகளை கொட்டுவதற்கு முறையான நடைமுறை பின்பற்றப்படாமல் கால்நடைகள் மேய்ச்சலில் ஈடுபடும் பகுதியில் கொட்டப்படுவதை ஏற்க முடியாது.
நீர் நிலைகள் பாதிப்பு
கால்நடைகளின் மேச்சல் நிலமாக குறித்த பிரதேசம் காணப்படுவதுடன் அவை நீர் அருந்தும் பிரதேசங்களும் அருகில் காணப்படுகிறது.
இவ்வாறான நிலையில் பொறுப்பற்ற முறையில் மலக்கழிவுகளை கொட்டுவதால் மழை காலங்களில் மழை நீருடன் மலக்கழிவுகள் கலந்து கிணறுகள் மற்றும் நன்னீர் நிலைகளுடன் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே பொறுப்பு வாய்ந்த பிரதேச சபை அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை
உறுப்பினர்கள் குறித்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என
விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.






ட்ரம்ப் அழுத்தத்தால் ஐரோப்பியம் ஒன்றியம் எடுக்கவிருக்கும் அதிரடி முடிவு: ரஷ்யாவிற்கு பின்னடைவு News Lankasri

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
