இலங்கையில் நாளாந்தம் 12 மணி நேர மின்வெட்டு ஏற்படும் அபாயம்
இலங்கை மின்சாரத்துறை பாரிய நெருக்கடியை நோக்கிச் செல்லும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.
அடுத்த மாத இறுதிக்குள் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்படவுள்ள மின் நெருக்கடி தொடர்பில் தான் ஆறு வாரங்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.
தற்போதைய நிலையில் 1 முதல் 3 மணித்தியாலங்கள் வரை ஏற்படுத்தப்படும் மின்தடை, எதிர்வரும் நாட்களில் 12 மணித்தியாலங்களாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த நெருக்கடியான நிலைமையை நிர்வகிக்க அரசாங்கத்திடம் எந்த திட்டமும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 12 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புகழ் மயிலா இது, 5 வருடம் முன் எப்படி உள்ளார் பாருங்க... போட்டோஸ் Cineulagam
போதுமான உணவு, மருந்துகளை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்... பிரித்தானிய மக்களுக்கு ஆலோசனை News Lankasri