லண்டனில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து! - லண்டன் வாழ் தமிழர்களுக்கான அறிவுறுத்தல்

Death London women Sabina Nessa
By Murali Nov 10, 2021 07:12 PM GMT
Report

லண்டனில் வாழும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர்களாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லண்டனில் இளம் பெண்கள் அடுத்தடுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களின் பின்னணியில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள இரவு விடுதி ஒன்றுக்கு தனது நண்பரை பார்க்கச் சென்ற ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் பெற்றோர், லண்டனில் பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

லண்டனில் கடந்த மாதம் 17ம் திகதி 28 வயதான ஷபினா நெஸ்ஸா என்ற ஆசிரியை இரவு 8.30 மணியளவில் தனது நண்பரை பார்க்ன வெளியில் சென்றார்.

இதன்போது அவர் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார். 24 மணி நேர தேடுதலின் பின்னர் பூங்கா ஒன்றிலிருந்து அவரது உடல் கண்டுக்கப்பட்டது. இலைகளால் மூடப்பட்ட நிலையில் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் நீண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஷபினா நெஸ்ஸாவின் உடல் மத வழிபாடுகளின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

இதன்பின்னர் ஊடங்களுக்கு கருத்து வெளியிட்ட குடும்பத்தினர்,

“இன்று எமக்கு மிகவும் துக்கமான நாளாகும். இந்த இழப்பு அளவிட முடியாத ஒன்றாகும். எங்கள் குடும்பத்தினரால் இதனை தாங்கிக்கொள்ள முடியாது. வாழ்வில் என்றும் நீங்காத சம்பவமாக இது எங்கள் மனதில் இருக்கும்.

இது போன்ற நிலைமை வேறெந்த பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது. இதற்காக பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த படுககொலை சம்பவம் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் பாரிய கண்டனங்கள் எழுந்துள்ளன. பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என பொது மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, இலங்கை தமிழர்கள் பலர் லண்டனில் வசித்து வரும் நிலையில், இந்த விடயம் குறித்து மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. அண்மைய காலமாக லண்டனில் பல்வேறு குற்றச் செயல்கள் தலைதூக்கியுள்ளன.

கொலை, கொள்ளை மற்றும் குடும்ப வன்முறைகளும் அதிகரித்துள்ளன. லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.        

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US