புதுக்குடியிருப்பில் டெங்கு அபாயம் அதிகரிப்பு - பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ள காரணத்தினால் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரிக்கும், இதனால் பொதுமக்கள் உங்களுடைய சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுமாறு புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த விடயம் தொடர்பான அறிவிப்பு இன்று(11.10.2026) வெளியிடப்பட்டுள்ளது.
டெங்கு அபாயம்
மேற்படி அறிவிப்பில்,
மழைக்காலம் அதிகரித்து விட்டதால் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகமாக இருக்கும். இதனால் பொதுமக்கள் அனைவரும், உங்கள் வீடுகளையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை அகற்றி, உங்களையும் குடும்பத்தினரையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நாளையதினம்(12) சுகாதார உத்தியோகத்தர்கள் உங்கள் வீடுகளுக்கு நேரில் வந்து டெங்கு பரிசோதனை செய்யவுள்ளனர்.
எனவே வீட்டு வளாகம், கூரைகள், நீர் தேங்கும் பாத்திரங்கள், பழைய டயர்கள், தேவையற்ற பொருட்களை சுத்தம் செய்து ஒத்துழைப்பு வழங்கவும்.
டெங்கு பெருக சாதகமான சூழலை வைத்திருப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ள நிலையில், சுத்தமாக வைத்திருப்பது அவசியம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
13 இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்றவருக்கு மரண தண்டனை: ஏற்றுக்கொள்ள முடியாதது - போப் லியோ News Lankasri