அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை மீண்டும் அதிகரிப்பு
இறக்குமதிக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ள சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மீண்டும் சந்தையில் உயர்வடைந்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் சந்தைக்கு தேவையான அளவு உற்பத்தி பொருட்கள் கிடைக்காமையே இந்த விலை அதிகரிப்பிற்கான காரணம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கௌபி, பயறு, உளுந்து, குரக்கன் மற்றும் மஞ்சள் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலைகளே இவ்வாறு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பயறுக்கு சந்தையில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன், ஒரு கிலோ கிராம் மஞ்சளின் விலை 4 ,000 முதல் 5, 000 ரூபாவிற்கும் இடையில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் ஒரு கிலோ கிராம் கௌபியின் விலை 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளதுடன் ,ஒரு கிலோ கிராம் உளுந்து 1,600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
