நாட்டில் சடுதியாக அதிகரித்துள்ள பணவீக்கம்! எதிர்க்கட்சித் தலைவர் தகவல்
அரசாங்கம் பதவி விலகுவதனைத் தவிர வேறு மாற்று வழிகள் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய சூழ்நிலை குறித்து ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் பாரிய அழிவுகள் இடம்பெற்று வருவதாகவும் மக்கள் இந்த அரசாங்கத்தை நம்பத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெருக்கடியான நிலையில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதனை புரிந்து கொண்டு பதவி விலகுவதனைத் தவிர அரசாங்கத்திற்கு மாற்று வழியில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லக்கூடிய ஒர் தரப்பிடம் இந்த நாட்டை ஒப்படைக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் நாட்டை பாதுகாப்பானதாக மாற்றாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் பணவீக்கம் மிதமிஞ்சிய அளவில் அதிகரித்துள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் எதேச்சாதிகாரமான தீர்மானங்களினால் நாட்டின் விவசாயத்துறை வீழ்ச்சி கண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 14 மணி நேரம் முன்
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam