இலங்கையில் பணவீக்கம் மேலும் உயர்வு! - மத்திய வங்கி அறிக்கை

Sri Lanka Money Central Bank of Sri Lanka Inflation
By Murali Jan 22, 2022 12:53 PM GMT
Report

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலமைந்த ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் 2021 டிசம்பரில் 7.0 சதவீதத்திற்கு உயர்வடைந்த அதேவேளை, ஆண்டிற்கு ஆண்டுப் பணவீக்கம் 14.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (NCPI, 2013=100) (ஆண்டிற்கு ஆண்டு) மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 நவம்பரின் 11.1 சதவீதத்திலிருந்து 2021 டிசம்பரில் 14.0 சதவீதத்திற்கு அதிகரித்தது.

அதேவேளை, ஆண்டுச் சராசரி அடிப்படையில் NCPI 2021 நவெம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2021 டிசம்பரில் 7.0 சதவீதத்திற்கு அதிகரித்தது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் மாதாந்த விலை அதிகரிப்புக்களால் பணவீக்கம் தூண்டப்பட்டிருந்தது.

அதனைத்தொடர்ந்து, உணவுப் பணவீக்கமானது (ஆண்டுக்கு ஆண்டு) 2021 நவம்பரின் 16.9 சதவீதத்திலிருந்து 2021 டிசம்பரில் 21.5 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, உணவல்லாப் பணவீக்கமும் (ஆண்டுக்கு ஆண்டு) 2021 நவம்பரின் 6.2 சதவீதத்திலிருந்து 2021 டிசம்பரில் 7.6 சதவீதத்திற்கு அதிகரித்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெணின் மாதாந்த மாற்றம் 2021 டிசம்பரில் 3.68 சதவீதத்தினைப் பதிவுசெய்தமைக்கு முறையே 3.00 சதவீதமாகவும் 0.68 சதவீதமாகவும் காணப்பட்ட உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்கள் காரணமாக அமைந்தன.

அதற்கமைய, உணவு வகையினுள் காய்கறிகள், அரிசி, மற்றும் பச்சை மிளகாய் என்பவற்றின் விலைகளில் முதன்மையான அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.

மேலும், பிரதானமாக உணவகம் மற்றும் விடுதிகள், மதுசாரக் குடிவகைகள் அத்துடன் புகையிலை (சாராயம், வெற்றிலை) துணை வகைகளில் மாத காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட விலை அதிகரிப்புக்கள் காரணமாக உணவல்லா வகையிலுள்ள பொருட்களின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன.

பொருளாதாரத்தின் அடிப்படைப் பணவீக்கத்தினைப் பிரதிபலிக்கின்ற மையப் பணவீக்கம், 2021 நவம்பரின் 8.8 சதவீதத்திலிருந்து 2021 டிசம்பரில் 10.8 சதவீதத்திற்கு அதிகரித்த அதேவேளை, ஆண்டுச் சராசரி மையப் பணவீக்கம் 2021 நவம்பரின் 5.0 சதவீதத்திலிருந்து 2021 டிசம்பரில் 5.5 சதவீதத்திற்கு அதிகரித்தது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US