கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரிக்கும் சட்டவிரோத மணல் அகழ்வு: முறைப்பாடுகள் விசாரணை இன்றி இழுத்தடிப்பு (Photos)
கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வுகளுக்கான எந்த விதமான அனுமதிகளும் வழங்கப்படாத நிலையில், பல பகுதிகளிலும் இருந்து நாளாந்தம் 85தொடக்கம் 90இற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்லப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதனால் விவசாயநிலங்கள், நீர்ப்பாசனக் கட்டுமானங்கள், கிராமிய வீதிகள் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவட்டத்தில் மணல் அகழ்வுகளுக்கான எந்த விமான அனுமதிகளும் வழங்கப்படாத நிலையில் முரசுமோட்டை, மருதங்குளம், உப்பாறு, ஊரியான் பழைய கோரக்கன் கட்டு, ஐயன் கோவிலடி, பெரிய குளம் ஆகிய பகுதிகளிலிருந்து நாளாந்தம் இரவு பகலாக 85தொடக்கம் 90இற்கும் மேற்பட்ட கனரக வாகனங்களில் கிளிநொச்சி பொலிஸாரின் துணையுடன் சட்டவிரோதமாக மணல் எடுத்துச் செல்லப்படுகின்றன.
குறிப்பிட்ட சில பகுதிகளில் இராணுவ காவலரண்கள் அமைக்கப்பட்டு மணல் அகழ்வுகள் தடுக்கப்பட்டுள்ள நிலையிலும், பல பகுதிகளிலிருந்தும் இரவு பகலாகக் கிளிநொச்சி பொலிஸாரின் முழுமையான ஆதரவுடன் கனரக வாகனங்களில் சட்ட விரோதமாக மணல் அகழ்வுகள் மேற்கொள்ளப்படு கொண்டு செல்லப்படுகின்றன.
இவ்வாறு மணல் கொண்டு செல்லப்படும் சந்தர்ப்பங்களில் சிவில் உடையில் பொலிஸார் பாதுகாப்பாகக் கனரக வாகனங்களை ஏ-35 வீதி வரை கொண்டு வந்து விடுகின்ற நிலையே காணப்படுகின்றது.
இவ்வாறு தொடரும் மணல் கொள்ளையால் பெருமளவான விவசாய நிலங்கள், நீர்ப்பாசன கால்வாய்கள், நீர் விநியோக வாய்க்கால்கள் என்பன கடும் சேதத்திற்கு உள்ளாகி வருகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வுகளுக்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கப்படாத நிலையில், இவ்வாறு சட்டவிரோதமாக மணல் கொண்டு செல்லப்படுகின்ற போதும் பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையே காணப்படுகிறது.
இவ்வாறு வயல்கள் நிலங்களில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வுகள் தொடர்பாகக் காணி உரிமையாளர்களால் ஜனவரி மாதம் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் முறைப்பாட்டை விசாரிக்காது மாறாக முறைப்பாட்டாளரை அதற்கான சாட்சியங்கள், ஆதாரங்கள் இருக்கின்றனவா என அச்சுறுத்தி முறைப்பாட்டை ஏற்க மறுத்த நிலை காணப்படுகின்றது.
இதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் நபர்களால் நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டபோதும் அந்த முறைப்பாடுகளை விசாரணை செய்யாது இழுத்தடிக்கும் நிலையே காணப்படுகின்றன.
கடந்த ஜனவரி மாதம் 28ஆம் திகதி விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பிலும், மார்ச் மாதம் 03ஆம் திகதி ஆகிய தினங்களில் இருதடவைகள் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் நபரால் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் இரண்டு முறைப்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், இதுவரை எந்தவிதமான விசாரணைகளை மேற்கொள்ளவில்லையென்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.









விஜய்யின் ‘குஷி’ ரீரிலீஸ் தியேட்டர் எல்லாம் காத்து வாங்குதா.. பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்ரோலுக்கு பதில் Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
