அதிகரிக்கும் துரித உணவு கலாச்சாரமும் தொற்றாத நோய்களும்: சுகாதார அமைச்சு வழங்கியுள்ள எச்சரிக்கை
அதிகரிக்கும் துரித உணவு கலாச்சாரத்தின் காரணமாக நாட்டில் தொற்றாத நோய்கள் அதிகரித்து வருவதால் நாட்டு மக்கள் வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் இன்று (10.01.2024) நடத்தப்பட்ட தொற்றாத நோய்கள் குறித்த சந்திப்பு ஒன்றிலேயே இந்த விடயங்கள் கூறப்பட்டுள்ளன.
நாட்டில் அதிகரித்துள்ள துரித உணவு கலாச்சாரத்தால் மக்கள் எண்ணெய், சீனி மற்றும் உப்பு அதிகளவில் அடங்கிய உணவுகளை உட்கொள்கிறார்கள்.
கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள்
இதன்மூலம், நாட்டு மக்களிடம் நீரிழிவு, புற்று நோய் மற்றும் இதய நோய்கள் அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் குறித்த கூட்டத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொடர்ந்து, குறித்த தொற்றாத நோய்கள் அதிகரிப்பதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் சுகாதார நிபுணர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri