அதிகரித்து வரும் டெங்கு - மட்டக்களப்பில் 2975 நோயாளர்கள்
இலங்கையில் இந்த ஆண்டில் முடிவடைந்த காலப்பகுதிக்குள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 10 ஆயிரத்து 155 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அந்த மாவட்டத்தில் 2 ஆயிரத்து 975 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கொழும்பு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 215 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 891 டெங்கு நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 572 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சன் டிவி சீரியல்களை ஓரங்கட்டி டாப் 5 TRPயில் முன்னேறிய விஜய் டிவி சீரியல்... அதிரடி மாற்றம் Cineulagam
