முதன்முறையாக இந்தியா செல்லும் பிரித்தானிய பிரதமர் ரிஷி: வெடித்தது சர்ச்சை
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம், G20 உச்சி மாநாட்டிற்காக இந்தியா செல்லவுள்ளார்.
பிரித்தானியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான, தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது, 12ஆவது சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற றிலையில், இந்தியா சார்பில் இந்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சரான பியுஷ் கோயல், பிரித்தானியா சார்பில் பிரித்தானிய வர்த்தகச் செயலரான கெமி பேடனாக் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், ரிஷி தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியான நிலையில்,பிரித்தானிய அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.