ரிஷாத் பதியுதீனின் மனைவியின் கோரிக்கையை நிராகரித்து நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
சந்தேகநபர்களான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோரின் பிணை கோரிக்கை மீண்டும் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே பிணை கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், எதிர்வரும் செப்டெம்பர் 6ஆம் திகதி வரை ரிஷாத் பதியுதீனின் மனைவி மற்றும் மாமனார் ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறுமி ஹிஷாலினி தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சந்தேகநபர்கள் தற்போது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்னதாக இரண்டு சந்தர்ப்பங்களில் சந்தேகநபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கைகள் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 17 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam