ஜோசப் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடன் விடுதலை செய்க: அரசிடம் ரிஷாத் வலியுறுத்து!
கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.
ரிஷாத் பதியுதீனின் கருத்து
அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த கைதை தமது கட்சி வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அந்த அறிக்கையில்,“ஜனநாயக அடக்கு முறைகளில் இருந்து விடுபடுவதன் ஊடாக மட்டுமே நாட்டின் இன்றைய அவல நிலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற முடியும் எனவும், வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப முடியும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜனநாயக விழுமியங்கள்

ஜனநாயக விழுமியங்களை பேணுவதன் மூலமே சர்வதேச நாடுகளினதும், சர்வதேச அமைப்புக்களினதும் ஒத்துழைப்பையும் உதவிகளையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும்.
எனவே, பழிவாங்கும் எண்ணத்தைக் கைவிட்டு, அநியாயமாக கைதுசெய்யப்பட்ட ஜோசப்
ஸ்டாலின் உள்ளிட்ட போராட்டக்காரர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும்”என
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 21 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam