வவுனியா மாநகரசபையின் கழிவகற்றல் இடத்தை பார்வையிட்ட றிசாட் எம்.பி
வவுனியா மாநகரசபையின் கழிவுகள் கொட்டப்படும் இடத்தினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாட் பதியுதீன் பார்வையிட்டுள்ளார்.
வவுனியா புதிய சாளம்பைக்குள மக்களின் முறைப்பாட்டையடுத்தே அவர் இன்று (17.02.2024)அந்த பகுதிற்கு சென்று பார்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நோய் தாக்கம் ஏற்படும் அபாயம்
மேலும், வவுனியா மாநகரபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் கழிவுகள் வவுனியா,
பம்பைமடுப் பகுதியில் நீண்ட காலமாக கொட்டப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் குறித்த கழிவுகளால் அதன் அருகில் உள்ள புதிய சாளம்பைக்குளத்தில் வாழும் மக்கள் தாம் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.
குறித்த கழிவுகள் காற்று மற்றும் நீர் ஊடாகவும், கால்நடைகள் மூலமாகவும் தமது குடிமனைக்குள் வருவதாகவும் இதனால் நோய் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் புதிய சாளம்பைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனிடம் முறையிட்டடிருந்தனர்.
இதனையடுத்து, குறித்த பகுதி மக்களுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் கழிவுகள் கொட்டப்படும் இடத்தை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 16 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
