றிசாட் - மஸ்தான் ஆதரவாளர்களிடையே முறுகல்: வாகன தொடரணி மீது தாக்குதல்

Sri Lanka Police Vavuniya Risad Badhiutheen K. Kader Masthan Parliament Election 2024
By Thileepan Nov 12, 2024 04:38 AM GMT
Report

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தானின் பிரசாரக் கூட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையில் இருவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும், அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் பிரதான வீதிக்கு அருகில் நேற்று மாலை 8 மணியளவில் காதர் மஸ்தானின் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த றிசாட் பதியுதீன் அவர்களின் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டத்தை பார்த்து கூச்சலிட்டுச் சென்றிருந்தனர்.

P2P போராட்டம்! இராணுவ முற்றுகையை உடைத்து முன்னேற முற்பட்ட போது குழப்பத்தை ஏற்படுத்திய சுமந்திரன்

P2P போராட்டம்! இராணுவ முற்றுகையை உடைத்து முன்னேற முற்பட்ட போது குழப்பத்தை ஏற்படுத்திய சுமந்திரன்

 

றிசாட் - மஸ்தான் ஆதரவாளர்களிடையே முறுகல்: வாகன தொடரணி மீது தாக்குதல் | Rishad Mastan Supporters Attack In Vavniya

வாகன தொடரணி மீது தாக்குதல்

சற்று நேரத்தில் குறித்த மோட்டார் சைக்கிள்களுக்கு பின்னால் முன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீனும் அவரது ஆதரவாளர்களும் பயணித்த வாகனத் தொடரணிகள், கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதிக்கு அருகே உள்ள பிரதான வீதி ஊடாக பயணித்துள்ளது.

இதன்போது, இரு தரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் குழப்பநிலை ஏற்ப்பட்டதுடன் சற்று நேரத்தில் அது கலவரமாக மாறி றிசாட் பதியூதீன் பயணித்த வாகனம் உட்பட வாகனத் தொடரணி மீது மக்கள் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

றிசாட் பதியுதீன் வாகனத்திற்குள் இருந்த நிலையில் அவரது வாகன கண்ணாடி அடித்து நொருக்கப்பட்டதுடன், அவரது ஆதரவாளர்களின் வாகனங்களும் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.

றிசாட் - மஸ்தான் ஆதரவாளர்களிடையே முறுகல்: வாகன தொடரணி மீது தாக்குதல் | Rishad Mastan Supporters Attack In Vavniya 

இருவர் வைத்தியசாலையில் அனுமதி

குறித்த தாக்குதலையடுத்து வாகனத் தொடரணி அப்பகுதியிலிருந்து சென்றிருந்த நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் நிலமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தனர்.

கலவரநிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்த பின்னர் காதர் மஸ்தானின் கூட்டம் பொலிஸாரின் பாதுகாப்புடன் தொடர்ந்து இடம்பெற்றிருந்தது.

சம்பவத்தில் காயமடைந்த இருவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் சூடுவெந்தபுலவு பகுதியில் இடம்பெற்ற காதர் மஸ்தானின் பொதுக்கூட்டத்தில் இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மக்களுக்கு அநுர வழங்கிய அதிரடி வாக்குறுதிகள்

யாழ். மக்களுக்கு அநுர வழங்கிய அதிரடி வாக்குறுதிகள்

தவராசாவிடம் ஒப்பம் எடுத்த தமிழரசு கட்சி: எச்சரித்த மனைவி

தவராசாவிடம் ஒப்பம் எடுத்த தமிழரசு கட்சி: எச்சரித்த மனைவி


  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US