டயகம சிறுமியின் ஆத்மா சாந்தியடைய இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நினைவேந்தல்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இல்லத்தில் பணியாற்றிய டயகம பகுதியை சேர்ந்த சிறுமி கடந்த 17ஆம் திகதி உயிரிழந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் டயகமவிற்கு விஜயம் செய்து அவருடைய குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அத்துடன் ஹிஷாலினியின் ஆத்மா சாந்தியடைய மெழுகுவர்தியும் ஏற்றியுள்ளார்.
அத்துடன் இதன்போது மலையக உறவுகளும் தத்தமது இல்லங்களில் மெழுகுவர்த்தி ஏற்றி சிறுமியின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இதற்கமைய மலையகத்தின் பல இடங்களிலும் நேற்று மாலை ஆறு முப்பது மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் இ.தொ.காவின் உப தலைவர் சத்திவேல், அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளர் கதிர்செல்வன், கொட்டகலை பிரதேசசபை தலைவர் ராஜமனி பிரசாத், பிரஜாசக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் பரத் அருள்சாமி, இ.தொ.காவின் இளைஞரணி பொதுச்செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ், அக்கரபத்தனை பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டிருந்தனர்.










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
