ரிஷாத் தொடர்ந்தும் வைத்தியசாலையில்
குற்றப்புலனாய்வுத் துறை காவலில் இருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தொடர்ந்தும் தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
பதியுதீன் நேற்று காலை, தமக்கு உடல்நிலை சீரில்லை என குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் முறையிட்டார்.
இதனையடுத்து அவர்கள், அவரை தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் துறைக்கு அழைத்துச் சென்றனர்.
வைத்தியர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், ரிஷாட் பதியுதீன் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது கட்சி தரப்பு தகவல்களின்படி பதியுதீன் பின்னர் மருத்துவமனையின் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார், அங்கு அவருக்கு எக்கோ கார்டியோகிராம் (எதிரொலி சோதனை) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின் தாக்குதல்தாரிகளுக்கு உதவியது என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பின்னர், பதியுதீனும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீனும் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வு துறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பதியுதீனின் வீட்டில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வந்த 16 வயது சிறுமியின் மரணம் குறித்தும் போலிசார் தனி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீக்காயங்களுடன் இந்த சிறுமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 12 நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 23 மணி நேரம் முன்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
