ரிசாட் மற்றும் ரியாஜ் ஆகியோர் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவர்
முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியூதீன் ஆகியோர் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட உள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த இருவரையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டிருந்ததுடன் அந்த அனுமதி இன்றுடன் முடிவடைகின்றது.
இந்த நிலையில் இன்று முதல் 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரையும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இருவரும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.