பாலஸ்தீன தூதுவரிடம் கவலை தெரிவித்த ரிஷாட் பதியுதீன் (Photos)
எல்லை மீறிய இஸ்ரேலின் எதேச்சாதிகாரப் போக்குகளால், காஸாவில் ஏற்பட்டுள்ள அவலங்கள் குறித்து, தனது ஆழ்ந்த கவலையை நாடாளுமன்ற உறுப்பினருமானர் ரிஷாட் பதியுதீன் பாலஸ்தீன தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில் இன்றையதினம் (19.10.2023) இடம்பெற்ற சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவத்துள்ளார்.
மீறப்பட்ட போர் விதிகள்
போர் விதிகளை மீறி இஸ்ரேல் கட்டவிழ்த்துள்ள வான் தாக்குதல்களை கண்டிப்பதுடன், முஸ்லிம் உலகம் ஒன்றுபட்டு ஸியோனிஸவாதிகளை எதிர்க்க ஆயத்தமாக வேண்டும் என்றும் பலஸ்தீனத் தூதுவரிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுமட்டுமன்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் குற்றுயிராகக் கதறும் சகோதரர்களுக்காகப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌசி மற்றும் ஹலீம் ஆகியோரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.