மஹேந்திரசிங் டோனியின் சாதனை முறியடிக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னாள் வீரர் மஹேந்திரசிங் டோனி, மற்றும் விருத்திமான் சஹா ஆகியோர் தங்களது 36-வது டெஸ்டில் நிகழ்த்திய சாதனையை ரிஷாப் பண்ட் தனது 26-வது டெஸ்டில் நிகழ்த்தியுள்ளார்.
தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இந்தநிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய விக்கெட் காப்பாளர் ரிஷாப் பண்ட், முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்காவின் 4 வீரர்களை பிடி எடுத்து ஆட்டமிழக்கச்செய்தார்
அவர், இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 93 பிடி மற்றும் 8 ஸ்டம்பிங் என்று மொத்தம் 101 பேரை ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார்.
இதன்படி விக்கட் காப்பில்ஈ 100 பேரை ஆட்டமிழக்கச்செய்த சாதனையை வேகமாக எட்டிய இந்திய விக்கெட் காப்பாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam