ஜனாதிபதி அநுரவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சிங்கள மகா நாயக்கர்கள்
சமகால அரசாங்கம் பாலின வாழ்க்கையை முறையை ஊக்குவிப்பதாக மகா நாயக்க தேரர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கண்டி மல்வத்து, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமஞ்ச பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து இந்த கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
பாலின வாழ்க்கை முறையை ஊக்குவிப்பது சிங்கள பௌத்த கலாசார விழுமியங்களைப் பலவீனப்படுத்தும் என அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மகா நாயக்கர்கள் கடும் எதிர்ப்பு
இந்த முயற்சிகள் மனித உரிமைகள் என்ற பெயரில் சமூக நெறிமுறைகளை சிதைக்கும் செயற்பாடுகள் என்றும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, குற்றவியல் சட்டத்தின் 82 ஆம் பிரிவில் உடல் தண்டனையை சட்டவிரோதமாக்க முன்மொழியப்பட்ட திருத்தத்துக்கும் மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தன்பாலின சேர்க்கை
இந்த செயற்பாடுகளை பொது விவாதம் இன்றி இது இளைஞர்களின் ஒழுக்கத்தைக் குறைக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
தன்பாலின சேர்க்கை என்பது பௌத்த போதனைகளுக்கு எதிரானது எனவும் இது சமூகத்துக்கு மீள முடியாத தீங்கு விளைவிக்கும் என வலியுறுத்தியுள்ளனர்.
சட்டங்களை இயற்றும் போது சிங்கள பௌத்த மரபின் விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam

சிந்தாமணியை வைத்து மீனாவை அழ வைக்க ரோஹினி போட்ட கேவலமான பிளான்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அவர் பிரதமரானால் நான் இந்தியாவுக்குச் சென்றுவிடுவேன்... கூறும் தொலைக்காட்சி பிரபலம்: யார் அந்தப் பெண்? News Lankasri
