ராஜபக்சவை கனடா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் நிராகரிக்க வேண்டும் - றிஷாட் பதியுதீன்

Vavuniya Canada
By Shan Jan 13, 2023 11:32 AM GMT
Report

ராஜபக்சவை கனடா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் நிராகரிக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வேட்பாளர்கள் தொடர்பாக ஆதரவாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றிருந்தது.

அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், இந்த நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி நாட்டு மக்களையெல்லாம் பஞ்சத்துக்கு உள்ளாக்கி இன்று நாட்டு மக்கள் பல சொல்லெண்ணாத துன்பங்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற வேளையிலே இந்த அரசாங்கம் அவ்வாறான மோசமான நிலைகளை சேர்ந்தவர்களோடு சேர்ந்து கொண்டு ஜனநாயக ரீதியாக நடத்தப்பட வேண்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலை கூட பிற்போடுவதற்கான சில சதிகளை முன்னெடுத்து வருவதை நாங்கள் கண்டிக்கிறோம்.

ராஜபக்சவை கனடா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் நிராகரிக்க வேண்டும் - றிஷாட் பதியுதீன் | Rishad Badudeen Press Meet Vavuniya

இந்த தேர்தல் ஜனநாயக ரீதியாக உரிய நேரத்திலே நடத்துவதன் ஊடாக துன்பத்திலும், கஷ்டத்திலும் இருக்கின்ற மக்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்வதற்கு இது காரணமாக அமையும்.

அதை விட்டுவிட்டு குறுக்கு வழியினால் இந்த தேர்தலை நிறுத்தி ஜனநாயக தேர்தலுக்கு எதிராக செயற்படுவது என்பது ஒரு பிழையான நடவடிக்கை என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்.

தேர்தலை பிற்போடுவதற்கான சதி

இன்று பல கட்சிகள் தற்போது தேர்தலுக்கு தயாராக இருக்கின்ற போது இந்த நாட்டை குட்டிச்சுவராக்கிய கட்சி தான் தேர்தலுக்கு தயார் இல்லை என்ற காரணத்தினால் இந்த தேர்தலை பிற்போடுவதற்கான பாரிய சதிகளை ஒவ்வொரு வகையிலும், ஒவ்வொரு கோணத்திலும், முன்னெடுத்து வருகிறது.

எனவே நாங்கள் எதிர் பார்க்கிறோம் தேர்தல் ஆணைக்குழு மிக நேர்மையாக, நியாயமாக செயற்படுவதன் ஊடாக நிச்சயமாக இந்த தேர்தலை உரிய நேரத்திலே நடத்தி முடிக்கலாம் என நம்புகின்றோம்.

பயங்கரவாத சட்டம் இந்த நாட்டிலே உருவாக்கப்பட்டதன் நோக்கம் மாறி அரசியல் நோக்கங்களுக்காக, சுயநலன்களுக்காக, தங்களை விருப்பம் இல்லாதவர்களை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

எனவே அந்த சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதிலே நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நாட்டுக்கு தேவையான சட்டங்களை வகுக்கின்ற போது நாட்டுடைய நலனை மையமாக வைத்து அது உருவாக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கூறியிருக்கிறோம்.

எனவே அண்மைக்காலமாக சாதாரண பல்கலைக்கழக மாணவர்களை, ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்கின்றவர்களை, உண்மையை பேசுகின்றவர்களை, அச்சுறுத்துவதற்காக, பயமுறுத்துவதற்காக, சிறைப்படுத்துவதற்கு வேறு காரணங்கள் இல்லாத காரணத்தினால் இந்த பயங்கரவாத தடை சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ராஜபக்சவை கனடா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் நிராகரிக்க வேண்டும் - றிஷாட் பதியுதீன் | Rishad Badudeen Press Meet Vavuniya

எனவே அதற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றுபட்டு அதனை எதிர்க்க வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டிருக்கிறது. ராஜபக்ச மன்னிக்கப்பட முடியாத ஒருவர். தான் ஜனாதிபதியாக இருந்த குறுகிய காலத்துக்குள்ளே நாட்டிலே இனவாத, மதவாத பிரச்சாரங்களை எழுப்பி அதனூடாக இந்த நாட்டை குட்டிச்சுவராக்கி இந்த நாட்டோடு சர்வதேச நாடுகளுக்கு இருந்த நட்பை நாசமாக்கிய ஒருவர்.

அது மாத்திரம் அல்லாமல் நாட்டிலே இருக்கின்ற எல்லா இனங்களும் ஆண்டாண்டு காலமாக ஒற்றுமையாக வாழ்ந்த இனங்களை மத ரீதியாக பிரித்து செயற்படுவதற்காக என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க முடியுமோ அவ்வளவு நடவடிக்கைகளையும் முன்னெடுத்து அழகான, வளமான இந்த நாட்டை பொருளாதார ரீதியாக என்றுமே இல்லாத அளவு ஒரு மோசமான நிலைக்கு கொண்டு வந்தவர். எனவே அவருக்குரிய தண்டனையை இந்த நாட்டிலே வழங்க வேண்டும்.

அவரை கனடா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்தும் நிராகரித்து அவருக்கு வீசா வழங்குவதை நிராகரிப்பதனூடாக இந்த நாட்டிலே அவர் இருந்து எங்களுடைய, இன்னும் ஒரு ஆட்சி வருகின்ற போது அவர் செய்த இந்த மாபெரும் தவறுகளுக்காக இந்த நாட்டு மக்களை பஞ்சத்திலே தள்ளியமைக்காக சட்ட நடவடிக்கையின் ஊடாக உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் எதிர் பார்க்கிறோம் என மேலும் தெரிவித்துள்ளார். 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US