விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த்! உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட தகவல்
கார் விபத்தில் படுகாயமடைந்த இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் குணமடைய 3 மாதங்கள் ஆகும் என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த், டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கிக்கு காரில் சென்றபோது, முகம்மதுபூர் ஜாட் பகுதியில் விபத்து ஏற்பட்டு சாலையின் மையத்தடுப்பில் கார் மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதன்போது உடனடியாக காரின் ஜன்னலை உடைத்து வெளியே குதித்த ரிஷப் பந்த், நூலிழையில் உயிர் தப்பியிருந்தார்.
மருத்துவமனை வெளியிட்ட தகவல்
இதனையடுத்து தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரிஷப் பண்ட்க்கு நெற்றியில் இரு இடங்களில் வெட்டுக்காயம், வலது கால் மூட்டு, வலது கை மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ரிஷப் பந்தின் கண் புருவத்திற்கு மேல் ஏற்பட்ட காயத்துக்காக சிறிய பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடலில் உள்ள காயங்களுக்காக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியுமா
இதேவேளை, கார் விபத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரர் ரிஷாப் பந்த் குறைந்தது 6 மாதங்கள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு (2023) ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறும் ஐ.பி.எல். அதற்கு முன் பெப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவிருந்த இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணமும், கிரிக்கெட் போட்டியும் ரத்து செய்யப்படும் எனவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பந்த் சாலையில் குறிப்பிட்ட வேகத்திற்கு அதிகமாகச் செல்லவில்லை. அவர் மது அருந்திவிட்டும் வாகனத்தை இயக்கவில்லை. அவர் மது அருந்தி இருந்தால் டெல்லியில் இருந்து வாகனத்தை இயக்கிக் கொண்டு வந்திருக்க முடியாது. பந்த் குடிக்கவில்லை என்பதை டெல்லியில் இருந்து விபத்து நடந்த இடம் வரை இருக்கும் சிசிடிவி காட்சிகள் உறுதி செய்கின்றன” எனவும் பொலிஸ் அதிகாரிகள் விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 22 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan
